Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 4 January 2014

மார்ச் இறுதியில் பள்ளிகளில் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு

 மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும். வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க முன்நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார். இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

No comments:

Post a Comment