Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 18 January 2014

அனாவசியமாக வரி கட்டறீங்களா பெற்றோர் பெயரில் சேமிங்க வரியை குறைக்க சூப்பர் வழி


‘சே எக்கச்சக்கமா வருமான வரியாக கட்ட வேண்டியிருக்கிறதே  என்று கவலைப்படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்.  பெற்றோர் பெயரில் முதலீடு செய்து சேமிங்க...வரி விலக்கு சூப்பராக கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி அறிக்கை  தாக்கல் செய்யும் போது பலருக்கும் சிக்கல், குழப்பம் தான். எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் விழிப்பர். அப்படியே  முதலீடு செய்தால் வரி விலக்கு பெரிதாக கிடைக்குமா என்று நம்பிக்கையில்லாமல் இருப்பர். ஆனால், தங்கள் மீது மட்டுமில்லாமல்,  வேறு வழியில் யோசித்தால் பலன் கிடைக்கும். தங்கள்  குடும்பத்துக்குள் முதலீடு செய்யவே பலரும் விரும்புகின்றனர். பணம்  போய்விடக்கூடாதே என்ற எண்ணம் தான். ஆனால், பெற்றோருக்கு உதவும் வகையில் வரி விலக்கு  தரக்கடிய முதலீடு உள்ளது.  இது ஒரு  மறைமுகமான வழிதான். ஆண்டுக்கு உங்கள் பெயரில் 2.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதற்கு வருமான வரி உ ண்டு. அதே சமயம், அந்த பணத்தை உங்கள் பெற்றோர் மீது முதலீடு செய்யுங்களேன். அதாவது, உங்கள் பெற்றோருக்கு பரிசாக  அந்த பணத்தை முதலீடு செய்தால் அதற்கு 10 சதவீத வட்டியும் கிடைக்கும். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானத்துக்குரிய வரி  விலக்கும் உண்டு. 

தாய், தந்தை இருவரும் மூத்த  குடிமக்கள். அவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை என்ற பட்சத்தில் இன்னும் வரி சலுகை உண்டு.  அதாவது, இருவர் பெயரிலும் தலா 2.5 லட்சம் ரூபாய் பரிசாக முதலீடு செய்யலாம். அப்படி செய்தால் ஆளுக்கு தலா 2.5 லட்சம்  ரூபாய் என இருவருக்கும் வரிச்சலுகை உண்டு. அவர்களுக்கு மாதாமாதம் 10 சதவீத வட்டி வருமானமும் கிடைக்கும். பரிசாக  பெற்றோர் பெயரில் முதலீடு செய்ய வேண்டுமானால் அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன. இதோ சில: உங்களது ஆபீசில்  போடப்பட்டுள்ள இன்சூரன்ஸ் பாலிசியில் உங்கள பெற்றோருக்கும் சலுகை இருக்கலாம். ஆனால், நீங்கள் தனியாக அவர்கள் மீது  அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவு வரி விலக்கு பெற இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். பெற்றோர் வாடகை வீட்டில் குடியிருந் தால் அவர்கள் வீட்டுக்கு வாடகை செலுத்தலாம். அதன் மூலம் வரி சலுகை பெறலாம். பங்கு இழப்பை சரி செய்ய  அவர்கள்  பெயருக்கு பங்குகளை மாற்றி  அவற்றை விற்றால் அதற்கு வரி விலக்கு பெறலாம். இப்படி பல வழிகள் உள்ளன. ஆனால்,  பெற்றோர் மூலமாக தான் வரி சலுகை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment