Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 22 January 2014

'வாக்காளர் தின' உறுதிமொழி: தேர்தல் கமிஷன் உத்தரவு

 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஜன., 24 முதல் ஜன.,26 வரை, 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விபரம்: தேசிய வாக்காளர் தினம் ஜன., 25. அன்று, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், ஜன.,24 ல், கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்கவேண்டும். ஜன., 25 ல், 'வாக்காளர் தின விழா' நடக்கும் இடங்களிலும்; ஜன., 26 ல், குடியரசு தின விழாக்களிலும், 'வாக்காளர் தின' உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், ஓட்டுச்சாவடிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 'வாக்காளர் தினம்' கொண்டாட வேண்டும். அரசியல் சாராத பிரமுகர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மட்டுமே மேடையில் அமர வேண்டும். முதல் முறையாக புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தின 'பேட்ஜ்' அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும், என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment