Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 4 January 2014

தொலைநிலைக்கல்வி நிறுவனங்கள் துவக்கம்: யு. ஜி.சி., கட்டுப்பாடு

திறந்த, தொலைநிலைக்கல்வி நிறுவனங்களை துவக்குவது குறித்த வரைவு விதிமுறைகளை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. இதற்காக பேராசிரியர் மாதவ மேனன் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அக்கமிட்டி பரிந்துரைத்த வரைவு விதிமுறைகள் யு.ஜி.சி., வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்குமாறு யு.ஜி.சி., செயலர் உபமன்யுபாசு அறிவித்துள்ளார். வரைவு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: திறந்த, தொலைநிலை படிப்புகளால், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 22 சதவீதம், அதிகரித்துள்ளது. உலகளவில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை தொலைநிலை கல்வி படிப்புகளில் பயன்படுத்தினால், 12 வது திட்டகாலத்தில் மாணவர்கள் செலவிடக்கூடிய கட்டணத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம். இக்கல்வி மையங்களை அங்கீகரிப்பது, அவற்றை கண்காணிப்பதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம்: திறந்த, தொலைநிலைக்கல்வி படிப்புகளை துவக்கும் நிறுவனம் பல்கலைக்கழகமாகவோ, நிகர்நிலைப்பல்கலைக்கழகமாகவோ இருக்க வேண்டும். அவை 10 ஆண்டுகளுக்கு மேலாக, வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு, பாடம் நடத்தியிருக்க வேண்டும். இவற்றின் கல்வி மையங்களை துவக்க அந்தந்த மாநிலஅரசுகளின் ஒப்புதலை பெற வேண்டும். ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகள் வரை நடத்த, அனுமதி வழங்கலாம். இந்நிறுவனங்களை கண்காணிக்க, போதிய அதிகாரங்களுடன், தனிசட்டத்துடன் கூடிய இந்திய தொலை நிலைக் கல்வி கவுன்சிலை, அமைக்கலாம், கல்வி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மூலமாகவே, மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும். போதிய வழிகாட்டிகள் இருந்தால், அக்கல்வி நிறுவனம் எம்.பில்., பிஎச்.டி., டி.லிட்., டி.எஸ்சி., ஆகிய ஆய்வு படிப்புகளுக்கு, ஆய்வாளர்களை சேர்க்கலாம். ஆய்வாளர்களை சேர்க்கும் நிறுவனங்கள், தனியாக ஆய்வாளர் அறிவுரை கவுன்சிலை, ஏற்படுத்த வேண்டும். அதில், 3 வெளிநிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment