சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்வில் ஆங்கில வினா தாள்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சென்னை பல்கலை கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. எம்.ஏ பொது நிர்வாக பாட பிரிவின் 2ம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் எழுதினர். வழக்கமாக பல்கலைக்கழகம் சார்பில் வினா தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று நடந்த தேர்வில் பல்கலை கழகம் ஆங்கில வினா தாள் மட்டுமே வழங்கியுள்ளது. இதனால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தமிழ் வழி மாணவர்கள் தேர்வு மைய அதிகாரியிடம் கேட்டதற்கு பல்கலை நிர்வாகம் தமிழ்வழி மாணவர்களும் ஆங்கில வினாத்தாளை படித்து விடை எழுத வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனால் வேறு வழியின்றி தமிழ் வழி மாணவர்கள் ஆங்கில வினா தாளை வைத்து தேர்வு எழுதினர். சென்னை பல்கலை கழகத்தில் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆங்கில வினா தாள் அளித்தது மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment