Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 22 January 2014

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் தொழிலாளர்கள், குழந்தை திருமணங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்பட விழா

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர், குழந்தைகள் திருமணத்தை தடுத்திடும் வகையில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான அரும்புகள் திரைப்பட விழா வருகிற 27-ம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இம்மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகளில் 14 வயதுக்குள்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. இதை ஒழிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, திடீர் ஆய்வுகளில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 662 சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு படித்து வருகிறார்கள். அதேபோல், கடந்த மாதம் மீட்கப்பட்ட 44 குழந்தைத் தொழிலாளர்களும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150ம், ஆண்டுக்கு நான்கு செட் இலவச சீருடைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பாக குழந்தைத் தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்கவும், குழந்தைத் திருமணங்களை தடுத்திடவும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் மூலம் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இது தொடர்பாக மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 27-ம் தேதி முதல், தொடர்ந்து 31-ம் தேதி வரையில் குழந்தைகள் குறும்பட திரைப்பட விழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், குழந்தைகளின் உரிமைகள், கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நற்சிந்தனைகள், குழந்தை திருமணத்தின் விளைவுகள், சுற்றுச்சூழல், எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய 7 குறும்படங்கள் திரையிடப்பட இருக்கிறது.
இப்படங்களை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட உள்ளனர். அதையடுத்து குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சிகள், விவாதம், கருத்து பரிமாற்றம், கண்காட்சி போன்றவகளும் நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவினை விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், கல்வித் துறை மற்றும் மக்கள் பொருளாதார மேம்பாட்டு சங்கம் மற்றும் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உதவியுடன் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment