Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 8 January 2014

பள்ளி மாடியிலிருந்து குதித்துமாணவி தற்கொலை முயற்சி

:கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், டியூஷன் பீஸ் கட்டவில்லை என ஆசிரியர் செய்த டார்ச்சரால், மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தெற்கு தெரு லலிதா மகள் பாரதி, 17. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 (ஏ2 குரூப்) படிக்கிறார். கணித பாடத்திற்கு, அத பள்ளியின் கணித ஆசிரியர் நடத்தும் டியூஷனில் படித்து வருகிறார்.

மிரட்டல்:டியூஷன் பீஸ் ரூ.1,500 கட்டவில்லை என, மூன்று மாதத்திற்கு முன்பு கணித ஆசிரியர் மாணவியை கண்டித்ததுடன், பொதுத் தேர்வுக்கான செமுறை தேர்வில் மதிப்பெண் போட மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாரதி, தனது தாயாரிடம் கூறியுள்ளார். தலைமையாசிரியை சசியிடம், லலிதா புகார் தெரிவித்தார். அவர், லலிதாவை சமாதானப்படுத்தினார்.

தற்கொலை முயற்சி:நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி பாரதி, வகுப்பு நேரத்தில், பாத்ரூம் செல்வதாக, ஆசிரியர் அனுமதியுடன், பகல் 12.15 மணிக்கு வெளியேறி, இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

பலத்த காயமடைந்த மாணவியை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் ர்த்தனர். தாசில்தார் முனுசாமி விசாரித்தார். இச்சம்பவம், கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வில் தால்வி:தலைமையாசிரியை சசி கூறுகையில், 'மாணவியின் தாய் டியூஷன் பீஸ் தொடர்பாக புகார் கூறியது உண்மை. ம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து கண்டித்தேன். அரையாண்டு தேர்வில் கணித பாடத்தில் 45 மதிப்பெண் பெற்று மாணவி பாரதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்' என்றார்.

சந்தேகம்:அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவி பாரதி, கணித பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது . டியூஷன் பீஸ் கட்டவில்லை என்பதற்காக, வேண்டுமென்றே கணித பாடத்தில் மதிப்பெண் குறைவாக போடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment