விருதுநகர், மேலதுலுக்கன்குளம், 3ம்வகுப்பு மாணவி சின்னக்காள், 8. "டெங்கு' காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலையால், அவதிப்பட்ட இவர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
விருதுநகர் அருகேயுள்ள மேலதுலுக்கன்குளம் அரசு பஸ் டிரைவர் வெங்கடேஷ், 36. இவருக்கு பாண்டி, 10, சின்னக்காள், 8, குருதுள்ளு விசுவாசர், 2, என மூன்று குழந்தைகள் இருந்தன. 3ம் வகுப்பு மாணவி சின்னக்காளுக்கு, கடந்தவாரம், காய்ச்சல் ஏற்பட்டது. இவருக்கு, கல்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் விருதுநகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. மாணவியின் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. பரிசோதனை செய்த டாக்டர்கள், "டெங்கு' காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். சின்னக்காள், மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள், சின்னக்காளிற்கு, டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை கடுமையாக பாதித்து இருந்ததை உறுதி செய்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, அங்கு, சிகிச்சை பலனின்றி சின்னக்காள் இறந்தார். 10 நாட்களுக்கு முன், விருதுநகரை சேர்ந்த சகோதரர்கள் இருவர், "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சின்னக்காளிற்கு, மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அதிக காய்ச்சலால், அவர் இறந்திருக்கலாம். ஆனால், "டெங்கு' காய்ச்சலால் இறக்கவில்லை, என்றார்.
No comments:
Post a Comment