Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 24 January 2014

தலைமை ஆசிரியர் அறையின் கண்ணாடியில் குத்திய மாணவனின் கை நரம்பு துண்டித்ததால் பரபரப்பு


சிறப்பு வகுப்புக்கு வராததால், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் கூறியதால், ஆத்திரமடைந்த மாணவன் கண்ணாடியில் ஓங்கி குத்தி அவனது கை நரம்பு துண்டித்தது.கொத்தவால்சாவடி தங்க சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில், 10ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. திங்கட்கிழமை பள்ளிக்கு சென்ற 3 பேரிட மும், பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கப்படுவீர்கள் என ஆசிரி யர் கூறியுள்ளார். 

ஆனால், அவர்கள் பெற்றோரை அழைத்து செல்லவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தலைமை ஆசிரியர் அறை அருகில் 3 மாணவர்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது, தலைமை ஆசிரியர் அறையின் உள்ளே சென்ற ஒரு மாணவன் அங்கிருந்த கண்ணாடியில் ஓங்கி குத்தினான். இதில், அவனது கை நரம்பு துண்டித்து ரத்தம் சிந்தியது.  வலியில் மாணவன் அலறி துடித்தான். ஆசிரியர்கள், அவனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment