Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 10 January 2014

தொழில்நுட்ப வளர்ச்சியால் புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது: ஆளுநர் வேதனை

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்று தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
சென்னை இலக்கிய சங்கம் சார்பில் நடத்தப்படும் 3 நாள் இலக்கிய விழாவான "சென்னை இலக்கிய திருவிழா 2014'-ஐ ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த இலக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் நடைபெறுகின்றன.
தொடக்கவிழாவில் ஆளுநர் பேசியது: இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியம் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தமிழ் மொழி 3,000 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களை கொண்டுள்ளது. சென்னையில் இலக்கிய விழா நடத்தப்பட வேண்டும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இப்போது இந்த விழா நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கைமுறை சுலபமாக மாறிவிட்டது. ஆனால், இலக்கியத்தால் மட்டுமே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க முடியும். சமுதாயத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காக்க இசை, கலை மற்றும் இலக்கிய விழாக்கள் அடிக்கடி நடத்தப்படவேண்டும்.
இந்த விழாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அறிவு மற்றும் தகவல்களை எளிதாக பெறுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் உலகத்தின் போக்கையே இணையதளம் மாற்றிவிட்டது.
இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை குறைத்துள்ளன. பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பே இயற்கையுடன் ஒன்ற வைக்கும். எனவே ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார் ஆளுநர்.

No comments:

Post a Comment