பென்னாகரத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை, இரண்டாவதாக திருமணம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த முள்ளுவாடியை சேர்ந்தவர் ஆசிரியர் ஆறுமுகம், 37. இவரது மனைவி தில்லையக்கரசி. இவர், பெரும்பாளையை அடுத்த புதுக்கரட்டில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். அரூர் எச்.புதுப்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியராக, ஆறுமுகம் பணியாற்றி வந்தார். இவர், சில மாதத்துக்கு முன், பென்னாகரத்தை அடுத்த, சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது, அரக்காசனஹள்ளியை சேர்ந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை கடந்த, டிசம்பர், 15ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக, போலீஸாருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. கல்வித்துறை அதிகாரிகளன் முதற்கட்ட விசாரணையில், திருமண செய்த தகவல் உறுதியானதால், ஹெச்.,புதுப்பட்டிக்கு ஆறுமுகத்தை, இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், போலீஸாரின் விசாரணையிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்தது, உறுதியானதால், நேற்று மாலை அவரை போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment