Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 5 January 2014

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு வெளியீடு அரசுத்தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் தகவல்

ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை நாளை 6–ந்தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் கு.தேவராஜன் தெரிவஇத்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தேர்வு முடிவுகள்
கடந்த ஜூன் மாதம் முதலாம் ஆண்டு மற்றும் 2–ம் ஆண்டு தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. அவரவர் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் மற்றும் தட்கல் முறையில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அனைவரும் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மதிப்பெண்களை பெற்றுக் கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதில் தனித்தேர்வர்களில் தேர்வு எழுதி, சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்களும், அகமதிப்பீட்டு தேர்வு மற்றும் கருத்தியல் தேர்வுக்கான அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, பட்டய சான்றிதழ் கிடைக்கப் பெறாத தேர்வர்களுக்கும், ஏற்கனவே தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அசல்களுடன், சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை உடனடியாக அணுக வேண்டும்.
மறுகூட்டல்
மேலும் கடந்த ஜூன் மாதம் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 6–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை விண்ணப்பங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tndge.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வருகிற 9–ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய இணைப்புகளுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment