Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 8 January 2014

அரசு பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்க.ஏற்பாடு !.. தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை தீவிரம்

கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் நடத்த முதன்மைக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகளோடு ஒப்பிடும் போது, அரசு பள்ளிகள் பொதுத் தேர்வுகளில் ஆண்டுதோறும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது. இப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு வாரத் தேர்வு, மாதத் தேர்வு நடத்துவது.
சிறப்பு வகுப்புகள் நடத்துவது என, பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதியும் துவங்க உள்ளது.
தேர்வு நெருங்கி வரும் வேளையில், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்க முதல் கட்டமாக கூட்டம் நடத்துவது என, மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடக்க உள்ள, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஒவ்வொரு பாடம் வாரியாக ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி, ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அறிவியல் பாடத்தைத் தவிர்த்து, தமிழ், ஆங்கிலம், கணக்கு, சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
மூன்று கட்டங்களாக நடக்கும் இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 208 அரசு பள்ளிகள், 12 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், முதல் கட்டமாக நாளை (9ம் தேதி) விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில், விருத்தாசலம், திட்டக்குடி பகுதி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.இரண்டாம் கட்டமாக கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதி ஆசிரியர்களுக்கு கடலூரிலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி ஆசிரியர்களுக்கு சிதம்பரத்தி<லும் ஆலோசனை வழங்கப்படுகிறது.பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கக் கூடிய எளிய வழிமுறைகள் என்ன. எந்தெந்த பாடங்களில் தேர்ச்சி குறைவாக <<<உள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்பிக்கும் வழிமுறைகள், தேர்ச்சியை அதிகரிப்பதில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதேப் போன்று பிளஸ் 2 ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment