பள்ளி கல்வித்துறையின் கீழ் கல்வி தகவல் மேலா ண்மை முறை (இஎம்ஐஎஸ்) என்ற பெயரில் மாணவ மாணவியர் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்கிறது. இதில் அனைத்து வகை மேலாண்மையின் கீழ் இயங்கும் உயர், மேல்நிலை பள்ளி மாணவ மாணவியரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் 16 இலக்கம் கொண்ட அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது அனைத்து வகை பள்ளி மாணவர்களின் புகைப்படங்களை ஒன்றியம் மற்றும் மாவட் டம் வாரியாக சம்பந்தப்பட்ட முத ன்மை கல்வி அலுவலர்கள் தொகுத்து அளிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சேகரிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகளின் புகைப்படங்களை டிவிடிகளில் பதிவேற்றம் செய்து, வரும் 30ம் தேதி இஎம்ஐஎஸ் மாநில மையத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அனை த்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment