பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 155 மையங்களில் நடக்கிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என மொத்தம் 187 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் 29 ஆயிரத்து 196 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
இதற்காக 72 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல், கம்ப்யூட்டர்சயின்ஸ் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு முன் கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 7ம் தேதி (@நற்று) துவங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று (7ம் தேதி) துவங்கியது.
இதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள 155 மேல்நிலைப் பள்ளிகள் செய்முறைத் மையங்களில் இத்தேர்வு நடைபெற்று வருகிறது. பகுதி வாரியாக நடைபெறும் இத்தேர்வை நடத்தவும், விடைத்தாள் திருத்தம் மற்றும் கண்காணிப்புப் பணியில் 900 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் நடைபெறும் செய்முறைத் தேர்வு விடைத் தாள்களை அன்றே திருத்தம் செய்து, அந்த மதிப்பெண்ணை அன்று மாலையே கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட இணைப்பு பள்ளியில் வழங்க வேண்டும். பள்ளி நிர்வாகம், "ஆன்லைனில்' மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்து, பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment