Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 8 February 2014

புத்தக வாசிப்பு நம் வாழ்க்கையை மேம்படுத்தும் : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு

புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும். எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பேசினார்.மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியின் சார்பில், 'இறையன்பு படைப்புலகம்' என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கம், சென்னை, அடையாறில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நேற்று நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக, முன்னாள் ஜனாதி பதி, அப்துல் கலாம் பங்கேற்றார்.

மதுரை, திருமலை நாயக்கர் கல்லூரியின் துணைத் தலைவர், ராஜகோபால் வரவேற்புரை ஆற்றினார். 'இறையன்பு ஆய்வுக் கோவை' நூலை, உயர் நீதிமன்ற நீதிபதி, நாகமுத்து வெளியிட, 'ராம்ராஜ்' ஆடைகள் நிறுவன உரிமையாளர் நாகராஜன் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், திறனாய்வு உரை நிகழ்த்தினார். இறையன்பு நன்றிஉரை ஆற்றினார்.இதில், அப்துல் கலாம் பேசியதாவது: புத்தகம் படிக்கும் பழக்கம் வந்தால், சிந்திக்கும் திறன் வரும்; சிந்திக்கும் திறன் வந்தால், அறிவு பெருகும்; அறிவு பெருகினால், முன்னேற்றம் ஏற்படும்.எனவே, நல்ல புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இறையன்பின் புத்தகங்களில், அதற்கான அம்சங்கள் உள்ளன. புத்தகம் வாசித்தால், நம் வாழ்க்கை மேம்படும்.நான் சிறுவனாக இருந்தபோது, 'லைப் பிரம் லாஞ்ச்' என்ற அறிவியல் நூலை படித்தேன.

எனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், அதையே படிப்பேன்.என் முயற்சியில், தடங்கல் ஏற்பட்டால், அந்த புத்தகமே, எனக்கு வழித்துணையாக இருக்கும். நான் கண்ணீர் சிந்தும் போது, கண்ணீர் துடைக்கும், விரலாக மாறும்.புதிய பாதை மற்றவர்கள் போல், வழக்கமாக சிந்திக்காமல், அவர்களில் இருந்து, மாறுபட்டு சிந்தித்தவர்களே, வரலாற்றில் கவனிக்கப்பட்டு உள்ளனர். கணிதமேதை ராமானுஜர் போன்றவர்கள் எல்லாம், தனித்து சிந்தித்ததால் தான், வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதிய பாதை படைத்தனர். அதற்கு, புத்தக வாசிப்பு அவசியமானது.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment