Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 24 February 2014

சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற....போட்டி ! ரூ.3 லட்சம் விலை கொடுக்க ஆசிரியர்கள் தயார்!

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவியை கைப்பற்ற
ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை பேரம் நடப்பதாகவும், அதற்கு பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதன்மை கல்வி அலுவலருக்கு, மேல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு என இரண்டு நேர்முக உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், உயர்நிலை பள்ளிகள் நேர்முக உதவியாளராக இருந்த
சீனிவாசன், பதவி உயர்வில், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலராக
சென்றதால், அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பொதுவாக, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், இப்பதவிக்கு விருப்பம் தெரிவிப்பர். வயது மற்றும் பணி மூப்பு, அனுபவம், அலுவலக நடைமுறைகளை நன்கு தெரிந்தவர் மற்றும் பணிக்காலத்தில் புகார்களுக்கு ஆளாக இருப்பது போன்ற அடிப்படையில், பள்ளிக் கல்வி இயக்குனரே நேர்முக உதவியாளரை தேர்வு செய்வார்.ஆனால், மதுரையில் இப்பதவியை பெற ஆசிரியர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களும் களத்தில் இறங்கி, தங்கள் சங்க நிர்வாகிகளை கொண்டுவர கடும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால், எப்போதும் இல்லாத வகையில், இப்பதவிக்கு தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்ட கல்வித் துறையில், அதிகாரிக்கும், ஆசிரியர்கள், சங்கங்களுக்கும் பாலமாக இருக்கும் பதவி இது. மாவட்டத்தில் மூத்த லைமையாசிரியருக்கே இதை வழங்க வேண்டும். ஆனால், சிலர், பணம் மற்றும் சிபாரிசு அடிப்படையில் பெற்று விடுகின்றனர். 3 லட்சம் ரூபாய் கொடுத்து பதவியை கைப்பற்றினால், அங்கு ஊழல் நடக்காமல் இருக்குமா? எனவே தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment