பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் புதிய பணியிடத்தை அரசு தேர்வுத்துறை தோற்றுவித்துள்ளது. இதில் கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்படவுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 ம் தேதி துவங்குகிறது. இதில் தேர்வு மையத்தில் புதிய பணியிடத்தை அரசு தேர்வுத்துறை தோற்றுவித்துள்ளது. இதில் தேர்வு மையங்களாக அனுமதிக்கப்பட்ட பள்ளியில் இதுவரை முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், எழுத்தர், இளநிலை உதவியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள். இவர்கள் தேர்வுக்கு உரிய முன் ஏற்பாடுகளை கவனித்தல், தேர்வு அறை அமைப்பு, வினாத்தாள், விடைத்தாள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது தேர்வுத்துறை அந்தந்த மாவட்டங்களில் சொந்தமாக கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்படுகின்றனர். இவருக்கு உதவியாளராக மற்றொரு ஆசிரியரும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த ரூட் ஆபீசர்கள் அருகருகே உள்ள இரண்டு, அல்லது மூன்று தேர்வு மையங்கள் இவர்களது பொறுப்பில் விடப்படும். கார் வைத்திருக்கும் ஆசிரியர் காரில் வினாத்தாள் கஸ்டோடியன் பாய்ண்டில் இருந்து வினாத்தாள்களை எடுத்து தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பார்கள், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை சேகரித்து உரிய மையங்களில் ஓப்படைக்க வேண்டும். இந்த பணிகளை ரூட் ஆபீசர்கள் செய்வார்கள். விடைத்தாள் காணாமல் போகாமல் இருக்கவும் முறையாக விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்புவதற்காகவும், தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment