:புத்தகம் கொண்டு வராததை, ஆசிரியர் கண்டித்ததால், தீக்குளித்த பள்ளி மாணவன், ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த முத்து மகன் விக்னேஷ்குமார்,14. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார். ஆங்கிலம், கணக்கு புத்தகங்கள் கொண்டு வராததால், வகுப்பாசிரியர் கண்டித்து, மாணவனை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியுள்ளார்.நாளை புத்தகத்தை கொண்டு வராவிட்டால், பெற்றோருடன் வந்து தலைமை ஆசிரியரை சந்திக்க வேண்டும், என கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி முடிந்த பின், வீட்டிற்கு சென்று, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிய மாணவனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இதை தெரிவித்து உள்ளார். இந்நிலையில் மாணவன் தீக்குளித்த செய்தி பரவியதால், மாணவர்களும், உறவினர்களும், நேற்று இரவு பள்ளி முன், மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment