சிவகங்கையில், பாட வேளையில், சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க, இரண்டு ஆசிரியர்கள் தலைமையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை, மருதுபாண்டியர் நகரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில், 200க்கும் மேற்பட்ட, மாணவ,மாணவிகள், பள்ளி அருகே உள்ள மைதானத்தில் நடந்த, "ஐவர் ஆட்டம்' என்ற சினிமா படப்பிடிப்பில், பார்வையாளர்களாக பங்கேற்றனர். வியாபார நோக்கில், தனிநபர் எடுக்கும், சினிமா படப்பிடிப்பிற்கு, அரசு பள்ளி மாணவர்களை, சீருடையுடன் அனுப்பி வைத்தது, அங்கு வந்த பெற்றோர்க்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, தமயந்தி கூறியதாவது: பார்வையாளர் பகுதியில், சில மாணவர்களை உட்கார வைக்க வேண்டும் என, படப்பிடிப்பு குழுவினர் அனுமதி கேட்டனர். இதற்காக, விளை யாட்டு பாட வேளையில், உடற்கல்வி ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர் தலைமையில், 40 மாணவர்களை மட்டும், படப்பிடிப்பு இடத்திற்கு அனுப்பினோம்; முடிந்தவுடன் பாதுகாப்பாக அழைந்து வந்தனர். பாட வேளையில், எந்த மாணவரையும் அனுப்பவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment