பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி, 45. இவர், சரியாக பள்ளிக்கு வருவதில்லை என, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம், பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டவர், கணித ஆசிரியர் திருமூர்த்தியின் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தார். அதில், அதிக மாணவர்கள், "பூஜ்யம்' மதிப்பெண் பெற்றனர். அதிர்ச்சியடைந்த தொடக்கக் கல்வி அலுவலர், திருமூர்த்தி குறித்து விசாரணை நடத்தி, வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். முறையாக பாடம் நடத்தாமல், மாணவர்கள் கல்வி பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், முறையாக பதிவேடுகளை பராமரிக்காததாலும், சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல் அலட்சியாக இருந்ததாலும், கணித ஆசிரியர் திருமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து, தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment