Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 24 February 2014

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார்.
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம். பணக்காரக் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்கும், ஏழைக் குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கும் செல்லும் நிலையை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசு பள்ளிகளில் கல்வி வழங்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.
ஆனால், இந்த நோக்கம் நாடு முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டியுள்ளது. பொருளாதார, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இதன் மூலமே களைய முடியும்.
தனியார் பங்கேற்புடன் மாதிரிப் பள்ளிகள்: தனியார் பங்கேற்புடன் கூடிய மாதிரிப் பள்ளிகள் என்கிற திட்டத்தை நான் எதிர்க்கிறேன். மாணவர்களுக்கு கல்வி வழங்குவது என்பது முழுமையாக அரசின் கடமையாகும். தனியாரின் கடமையல்ல.
ஏனென்றால், அவர்கள் லாபம் ஈட்டும் நோக்கத்தில்தான் கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வருகின்றனர்.
மத்திய அரசின் கடமையல்ல: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவது மத்திய அரசின் கடமையல்ல.
இந்தக் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லையென்றாலும் அரசு பள்ளிகளுக்குச் செல்வார்கள்.
எனவே, அவர்களுக்குச் செலவிடும் தொகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசுதான் கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கூறுகின்றன.
இதில் இரு தரப்பிடமும் நியாயம் இருக்கிறது. இதை அவர்கள் விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு கட்டணத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தனியார் பள்ளிகள் இந்தப் பிரிவின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அது அவர்களின் சமூகக் கடமையும் கூட.
அதிக புகார்கள்: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக இப்போது ஏராளமான புகார்கள் வருகின்றன. இதன் மூலம் இந்தக் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பொருள் இல்லை.
இப்போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்தும் பாலியல் கொடுமைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகமான புகார்கள் வருகின்றன. பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என இரண்டு மாணவர்கள் கூட எங்கள் ஆணையத்துக்குப் புகார்களை அனுப்பியுள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment