Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 24 February 2014

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்

சுயசிந்தனையை வளர்ப்பதில் தாய்மொழி வழிக் கல்வி பெரும் பங்கு வகிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆனந்தம் - இளைஞர்கள் நல அமைப்பு சார்பில் தன்னம்பிக்கைத் திருவிழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மூலம் கல்வி பயின்று வரும் 50-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மயில்சாமி அண்ணாதுரை பேசியது:-
என் தந்தைக்கு மொத்தம் 5 குழந்தைகள். அன்றைய கால கட்டத்தில் அவருக்கு மாதச் சம்பளமாக ரூ.120 கிடைக்கும். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது என் வீட்டில் எந்த வசதியும் கிடையாது. நான் பயன்படுத்திய புத்தகத்தைத்தான் என் தம்பி, தங்கைகளும் பயன்படுத்தவர்.
பொருளாதாரத்தின் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும், ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் கல்வி சலுகைகளை எங்களுக்குப் பெற்றுத் தர என் தந்தை மறுத்து விட்டார்.
அதேசமயத்தில், நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்காக அரசு வழங்கும் உதவித் தொகையில் படிக்கலாம் என்றே எங்களை அறிவுறுத்தினார். அவரின் வழிகாட்டுதல்படியே கல்வி பயின்றோம். அவர் அளித்த தன்னம்பிக்கையும், ஊக்கமும் தான் இன்று என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளது.
அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும். என்னுடன் பணியாற்றும் பல விஞ்ஞானிகள் அறிவியலை அவர்கள் தாய்மொழியில் கற்றவர்கள்தான். எனவே தாய்மொழி வழிக் கல்விதான் சுயசிந்தனையை வளர்க்கும்.
மங்கள்யான் விண்கலம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது வரை 18 மில்லியன் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ள மங்கள்யான் திட்டமிட்டபடி இலக்கைச் சென்றடையும் என்றார் அவர்.

No comments:

Post a Comment