Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 5 February 2014

பி.எட், எம்.எட், துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்வியியல் இளையோர் (பி.எட்.), மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) டிசம்பர் 2013–ம் ஆண்டு நடைபெற்ற துணைத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது. அதனை பல்கலைக்கழக இணையதளம் (www.tnteu.in) வழியாக அறிந்துகொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள் மே அல்லது ஜூன் 2014–ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்விற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை உரிய கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாக 12–ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். அபராத கட்டணத்துடன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய இறுதி நாள் வரும் 20–ந்தேதி ஆகும். விண்ணப்பப்படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnteu.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment