தமிழகத்திற்கு என, புதிய இணையதளத்தை, வருமான வரித்துறை, நேற்று துவங்கியது.
வருமான வரித்துறை, தமிழக மண்டல முதன்மை ஆணையர் ரவி, சென்னை வருமான வரி ஆணையரகத்தில், புதிய இணையதளத்தை துவக்கி வைத்தார். புதிய இணையதளத்தில், வருமான வரி செலுத்துவது தொடர்பான, அனைத்து படிவங்களும் உள்ளன. படிவங்கள் வேண்டுவோர், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வருமான வரித் துறையின் உத்தரவுகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகளும் இதில் இடம் பெறும். வருமான வரி செலுத்துவது தொடர்பான வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. tnincomtax.com என்ற இணையதள முகவரி, இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment