Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 February 2014

பணம் வாங்காமல் ஓட்டளிக்க எஸ்.எம்.எஸ்., மூலம் பிரசாரம் : தேர்தல் கமிஷன் திட்டம்


லோக்சபா தேர்தலில், பணம் வாங்காமல் ஓட்டளிக்க வலியுறுத்தி, வாக்காளர்களின் மொபைல் போனிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டிவருகிறது. அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு, ஓட்டிற்காக பணம், இதர பொருட்கள் அன்பளிப்பு கொடுப்பதை தடுக்கவும், அதைத் தருவோர் மீது, போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தொகுதிவாரியாக, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஓட்டளிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பணம் வாங்கினால் சிறை தண்டனை கிடைக்கும் என்பதையும், அறிவுறுத்தப்பட உள்ளது. இதனிடையே, பணம் வாங்காமல் ஓட்டளிக்க வலியுறுத்தி, வாக்காளர்களின் மொபைல் போனிற்கு, ஒரே நேரத்தில், மொத்தமாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டணம் விபரங்கள் தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,"வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வலியுறுத்தி, மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. அது நல்ல பலனைத் தந்தது. இதுபோல், இத்தேர்தலில் பணம் வாங்காமல், ஜனநாயக முக்கிய கடமையாக ஓட்டளிக்க வலியுறுத்தி, எஸ்.எம்.எஸ்.,மூலம் பிரசாரம் செய்யப்பட உள்ளது. அதற்காக, வாக்காளர்கள் விண்ணப்பத்தில் உள்ளபடி, மொபைல் போன் எண் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment