Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 12 February 2014

மத்திய அரசு ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

மத்திய அரசுக்கு எதிராக, இன்று துவங்கும், இரண்டு நாள், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில், 30 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

போராட்டம்:





ஏழாவது ஊதியக்குழுவை, 2014 ஜன., 1ல் இருந்து அமல்படுத்த வேண்டும். தனியார் மய திட்டம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடுதல் போன்ற, 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் கூட்டமைப்பு, நாடு தழுவிய, இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும், வேலை நிறுத்த போராட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள் அங்கம் வகிக்கும், 52 சங்கங்களை சேர்ந்த, 30 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். வருமானவரித் துறை, சுங்கத் துறை, தணிக்கைத் துறை, அமைச்சகத் துறை, பாதுகாப்பு பிரிவு, தபால் பணி உள்ளிட்ட மத்திய அரசின் பிரதான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து சில உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. அவை எந்த அளவு அமலாகும் என, இன்று தெரியும்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன கூட்டமைப்பு நிர்வாகிகள் வேலை நிறுத்தம் பற்றி கூறியதாவது: கோரிக்கையை வலியுறுத்தி, பல கட்ட போராட்டம் மூலம், அரசின் கவனத்துக்கு எடுத்து சென்றோம். ஆனால், மத்திய காங்., அரசு, எங்களுடைய கோரிக்கைகளுக்கு, செவிசாய்க்க மறுத்து விட்டது.

பாடம் புகட்டுவோம்:





எனவே, மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நாடு தழுவிய போராட்டத்துக்கு, அறை கூவல் விடுத்துள்ளோம். இப்போராட்டத்தில், மத்திய ஊழியர்கள் இடம்பெற்றுள்ள, 52 சங்கங்களை சேர்ந்த, 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அஞ்சல் துறையினர் 2 நாள் 'ஸ்டிரைக்':





அஞ்சல் துறையின் முக்கிய தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. அஞ்சல் துறையில் மட்டும், 6 லட்சம் ஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், தபால், மணியார்டர் பார்சல் உள்ளிட்ட, பல அஞ்சல் துறை சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment