வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால் வேறு பள்ளி ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தப்பட்டது.
இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியை ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் போஜன், இடுவம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜெய்வாபாய் பள்ளி முதுகலை ஆசிரியை சுமதி, ஆங்கில பாடத்தை கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு நடத்தினார்.
இடுவம்பாளையம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தப்படுவது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றனர். இத்திட்டம் மூலம் ஏதாவது ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் கூட தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியில் இருந்தும், ஒரு ஆசிரியர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர் இல்லாத குறையைப் போக்க முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment