Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 March 2014

தமிழகத்தில் 10 மணி நேரம் மின்வெட்டு அமல்: 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதி

தமிழகம் முழுவதும் மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியுள்ளது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 10,547 மெகாவாட். ஆனால் நாளொன்றுக்கு மின் தேவை 13 ஆயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால், காலையிலேயே வெயிலின் உக்கிரம் தெரிகிறது. வெயிலின் தாக்கம், இரவு வரை நீடிக்கிறது. இதனால் மின்தேவை அதிகரித்துள்ளது. ஆனால், மின்உற்பத்தி குறைவாக உள்ளது. சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருச்சி, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் தினமும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.
சென்னையில் பெரும் பாலும் இரவு நேரங்களில் மின்சப்ளை பாதிக்கப்படுகிறது. குறைந்த அழுத்த மின்சாரமே வினியோகிக்கப்படுவதால், மின்விசிறிகள் கூட சரியாக இயங்குவதில்லை. ஏற்கனவே கொசு தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புழுக்கம் காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பகலில் 2 மணி நேரமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இரு முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் இரு முனை மின்சாரத்தை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாததால், விவசாயம் பாதித்
துள்ளது. இதேநிலை ஒரு வாரம் நீடித்தால், விவசாயம் முற்றிலும் முடங்கி விடும்.

மின்வெட்டு காரணமாக, 10ம் வகுப்பு பொதுதேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். கோவையில் மின்வாரியம் அறிவித்துள்ளபடி மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. நேரம் மாறி மின்தடை செய்யப்படுவதால், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு மின்வெட்டால் 45 சதவீத பம்ப்செட் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு இப்போதே மின்வெட்டு துவங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் உற்பத்தி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் வடசென்னை, வல்லூர், மேட்டூர், தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி இல்லாததால் கடும் மின்வெட்டு நிலவியது. தற்போது இந்த அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுவதால், மின்வெட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக குறைந்துவிட்டது. இதனால்தான், தமிழகம் முழுவதும் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது

No comments:

Post a Comment