Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 3 March 2014

பிளஸ் 2 தேர்வுகள் இன்று ஆரம்பம்: 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


தமிழகம் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் உட்பட 10 லட்சம் பேர் எழுதுகின்ற னர். தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க 1000 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இயங்கும் 5,884 மேனிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 528 பேரும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக புதுச்சேரியில் 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பள்ளி மாணவர்கள் தவிர 1 லட்சம் தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.   டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க 4000 பேர் கொண்ட 1000 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களில் அறைக் கண்காணிப்பாளர்களாக சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஷூ, பெல்ட் அணிந்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷூ அணிந்து வந்தால் தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கலர் பென்சில், ஸ்கெட்ச் பேனா ஆகியவற்றை கொண்டு விடைத்தாளில் அடிக்கோடு இடுதல், படம் வரைதல் ஆகியவற்றை  தவிர்க்க வேண்டும்.மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பாட தேர்வுகளின் போது கண்காணிப்பு பணி மேற்கொள்ள அண்ணா பல்கலைக் கழக பறக்கும் படையும் தேர்வு மையங்களை ஆய்வு செய்ய உள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடியும். கேள்வித்தாள் படித்துப்பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 57 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

5 ஆண்டு எழுத  முடியாது...!

தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருப்பது, பார்த்து எழுதுவது, விடைத்தாளை மாற்றிக் கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த தண்டனை குறித்த விவரங்கள் ஒவ்வொரு தேர்வு மையத்தின் வாயிலிலும் ஒட்டப்பட்டு இருக்கும். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்தடையின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment