Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 March 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி திருச்சி மாவட்டத்தில் துவங்கியது

திருச்சி மாவட்டத்தில் செயின்ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும், முசிறி கல்வி மாவட்டத்தில் முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தமிழ் தாள்&1, தாள்&2, ஆங்கிலம் தாள்&1, தாள்&2 ஆகியவற்றின் விடைத்தாள்கள் என மொத்தம் 50 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 200 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமையிலும், முசிறியில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமையிலும் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. 24ம் தேதி முதல் மற்ற பாடங்கள் திருத்தும் பணி துவங்குகிறது. மொழி பாடங்களான தமிழ், ஆங்கில பாடங்களில் முதல் மற்றும் 2ம் தாள் இருப்பதால் இதன் விடைத்தாள்களை திருத்த 30 நாட்கள் ஆகும். எனவே, மற்ற பாடங்களின் விடைத் தாளை ஏப்ரல் 5க்குள் திருத்தி முடிக்க பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment