Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 21 March 2014

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்


தர்மபுரி மாவட்டத்தில், 28,006 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதுவதாகவும், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், சி.இ.ஓ., மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், வரும், 26ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு துவங்குகிறது. இதையொட்டி, மாவட்டம் வாரியாக, கல்வித்துறையினர் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், 28,006 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:
வரும், 26ம் தேதி துவங்கும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், தர்மபுரி மாவட்டத்தில், 204 அரசு பள்ளிகள், ஆறு அரசு உதவி பெறும் பள்ளிகள், 18 சுயநிதி பள்ளிகள் மற்றும், 57 மெட்ரிக்கப்பள்ளி என மொத்தம், 285 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என, 15,355 மாணவர்களும், 12,652 மாணவிகள் என, 28,006 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வு, 55 அரசு பள்ளிகள், இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு சுயநிதி பள்ளி, 10 மெட்ரிக் பள்ளிகள் மற்றும், ஐந்து தனியார் மையங்கள் என மொத்தம், 73 தேர்வு மையங்களில் நடக்க உள்ளது. இதில், 68 தேர்வு மையங்களில் பள்ளி மாணவர்களும், ஐந்து தேர்வு மையங்களில் தனித்தேர்வு மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
இம்மையங்களில், மாணவர்கள் தேர்வு எழுத தேவையான வசதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது. பொதுதேர்வை முன்னிட்டு, தர்மபுரி, பாலக்கோடு, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி , பென்னாகரம் ஆகிய பகுதிகளில் மொத்தம், பத்து வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வை கண்காணிக்க, 73 முதன்மை கண்காணிப்பாளர்கள், பத்து வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், பத்து கூடுதல் கட்டுகாப்பாளர்கள், 73 துறை அலுவலர்கள் மற்றும் சி.இ.ஓ., டி.இ.ஓ., டி.இ.இ.ஓ., மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் உட்பட, 100 பேரும், 1,400 அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், ப்ளஸ்2 தேர்வை போன்றே, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வுகளுக்கும், கார்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் எடுத்துச் செல்வது மற்றும் திரும்ப தேர்வு மையங்களுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு வழக்கமான நேரத்தை விட, ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, காலை, 9 மணிக்கு துவங்குகிறது. எனவே, மாணவ, மாணவிகள் தேர்வு துவங்கும் முன் தேர்வு அறைகளுக்கு செல்ல வேண்டிய நடைமுறைகளை எடுக்கவேண்டும், என்றார்.

No comments:

Post a Comment