Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 March 2014

தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

தேர்தல் விதிமுறைகள் மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய
பொறுப்பாளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சந்திரசேகரன், இளம்பருதிஅன்னம்மாள் ஆகியோர் லோக்சபா தேர்தலையொட்டி சத்துணவு மைய பொறுப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினர்.
சத்துணவு மையத்தில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய அனுமதிக்க கூடாது. பணியாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்தல்மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க கூடாது.
கணவர்உறவினர் என யாருக்காவும் பிரசாரத்திற்காக விடுமுறை எடுக்கக்கூடாதுஅலுவலக பொருட்களை தேர்தலுக்கு உபயோகத்திற்கு அளிக்க கூடாது. தேர்தல் பணி அளிக்கப்பட்டால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தேர்தல் முடிவும் வரை தலைமையிடத்தை விட்டு முன் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது. தேர்தல் விதிமுறைகளை மீறும் சத்துணவு மைய பொறுப்பாளர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் உள்ள சத்துணவு பணியாளர்கள் பணம் வாங்காமல் மனசாட்சியுடன் அனைவரையும் ஓட்டளிக்க வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கினால் சிறை தண்டனைக்குரிய குற்றம் என்பதை மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும்.

No comments:

Post a Comment