Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 20 March 2014

பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியரை பாதுகாக்கும் காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியரைபாதுகாக்கும் காவல்துறை அதிகாரி மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிபுதுச்சேரிஅரசை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
புதுச்சேரி மாநிலத்தில் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்கள் வெகுவாக தலைதூக்கியுள்ளன. இருளன்சந்தை அரசுப்பள்ளி, செல்லிப்பட்டு அரசுப்பள்ளி, கதிர்காமம் அரசுப்பள்ளி, அரும்பார்த்தபுரம் அரசுப்பள்ளி, காரைக்கால் வினீத் ஆங்கிலப்பள்ளி என மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இறுதியாக மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று புதுச்சேரி சுசீலாபாய் அரசு பெண்கள் பள்ளியில் சில மாணவிகளை சிறப்பு வகுப்பு என்றழைத்து ஒரு ஆசிரியரால் பாலியல் கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது. தனது பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் மீறி சில சம்பவங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வெளிவராத சம்பவங்கள் அதிகமாகும்.
பொய்வழக்கை திரும்பப்பெறுக! : பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து நடைபெறுகிறதே என்ற ஆதங்கத்தில் மாணவர், மாதர் அமைப்பினர் சுசீலாபாய் பள்ளி ஆசிரியர் வீட்டுக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இந்நிலையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை அதிகாரியின் துணையோடு உண்மைக்கு மாறாக திருடியதாக பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் அக்கிரமத்தை பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தை கேட்டிருந்தால் எந்தளவுக்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது என்பதை உணர முடியும். இப்படிப்பட்ட கொடூரம் நடந்துள்ள நிலையில் தவறிழைத்த ஆசிரியரை பாதுகாக்கும் முயற்சியில் ஆசிரியர் கூட்டமைப்பு, அரசு ஊழியர் கூட்டமைப்பு என்ற ஒரு சில அமைப்புகள் முயற்சித்து வருகிறது.ஒரு சில கருப்பு ஆடுகளின் தவறான செய்கையால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, போராடிய மாணவர்கள் மீது வேண்டுமென்றே திருட்டு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதோடு குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு வெ. பெருமாள் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment