Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 March 2014

யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் பெயர், பதவி, புகைப்ப டம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பணியை கலெக்டர் நடராஜன் பார்வையிட்ட பின் கூறு கையில், மாவட்டத்தில் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் தலை மை அலுவலர் மற்றும் வா க்கு பதிவு அலுவலர்கள் நிலை 1, 2, 3 என மொத்தம் 5200 அலுவலர்களுக்கான சுய விவரங்கள் அனை த்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் எந்த வாக்குசா வடி மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறித்து கணினி மூலம் அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருள் கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment