Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 25 March 2014

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்கத்தில் முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள் திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 தாளும், மதியம் 10 தாளும் திருத்த அனுமதிக்க வேண்டும், தாள் ஒன்றுக்கு ^30 வரை சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்வுத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதன் மீது தேர்வுத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தேர்வு மையங்களில் விடைத்தாள் திருத்த தொடங்குவதற்கு முன்னதாக வாயில் கூட்டம் நடத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

இந்த வாயில் கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படும் என்று தேர்வுத் துறை கருதுகிறது. மேலும், காலதாமதமாக விடைத்தாள் திருத்த தொடங்கினால் அவசரம் அவசரமாக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டிவரும். அப்போது மதிப்பெண் குறைவாக போடவும், கவனம் இல்லாமல் உரிய மதிப்பெண் வழங்க முடியாத நிலையும் ஏற்படும். பின்னர் மறு மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வருவதும் ஆண்டுதோறும் தொடர்கிறது. 

இது போன்ற நிகழ்வால் கடந்த ஆண்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை மொமோ கொடுத்துள்ளது. இது போன்ற அவப்பெயரை தடுக்க தேர்வுத் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.  

No comments:

Post a Comment