Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 3 May 2014

பள்ளி செல்லா குழந்தைகள் 1,254 பேர்... : 15 யூனியன் பகுதிகளில் அதிரடி "சர்வே'


நாமக்கல்: அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மாவட்டம் முழுவதும், 1,254 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இயக்குனரகம் உத்தரவுபடி, மாநிலம் முழுவதும், ஆண்டு தோறும், 6-14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. அந்தந்த யூனியன் பகுதியில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர், இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த ஆண்டுக்கான பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, கடந்த ஏப்ரல், 1ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 15 யூனியன்களில், 3,400க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில், பள்ளி செல்லா குழந்தைகளின், மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கணக்கெடுப்பின்படி, மாவட்டம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் என, மொத்தம், 1,254 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், அதிகபட்சமாக, பள்ளிபாளையம் யூனியனில், 437 குழந்தைகளும், குறைந்த பட்மாக, மோகனூர் யூனியனில், 20 குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில், 96, கொல்லிமலையில், 90, எருமப்பட்டியில், 76, சேந்தமங்கலத்தில், 55, புதுச்சத்திரத்தில், 26, ராசிபுரத்தில், 21, வெண்ணந்தூரில், 62, நாமகிரிப்பேட்டையில், 24, திருச்செங்கோட்டில், 194, மல்லசமுத்திரத்தில், 23, எலச்சிப்பாளையத்தில், 53, ப.வேலூரில், 27, கபிலர்மலையில், 23 பேர், என மொத் தம், 1,254 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 2,056 குழந்தைகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், 1,544 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, 1,567 குழந்தைகள் கண்டுபிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 1,254 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளில், ஆறு மாதத்துக்குள் பள்ளி செல்லாமல் இருப்பவர்கள், மீண்டும் பள்ளிக்கு அனுப்பவும், ஓராண்டுக்கு மேல் பள்ளி செல்லாமல் உள்ள குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து, ஆறு மாதம் பயிற்சி அளித்து, பின் அரசு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மே, 7 வரை, கண்டறியப்படும் குழந்தைகளின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். 8ம் தேதி முதல், 15ம் தேதி வரை பதிவு செய்ததை சரிபார்த்தல் பணியும், மே, 31ம் தேதி மாநில திட்ட இயக்ககத்தில், சி.டி.,யில் ஒப்படைத்தல் பணியும் மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment