Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 3 May 2014

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பம்


பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம். இதற்கு “லேட்ரல் என்ட்ரி” என்று பெயர். 2014-15-ம் கல்வி ஆண்டில் லேட்ரல் முறையில் பாலிடெக்னிக்கில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வழங்கப்பட உள்ளது. 
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசம். இதற்கு சான்றொப்பம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும், சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் செயற்கை உடல் உறுப்புகள் தயாரிப்பு தொடர்பான டிப்ளமா படிப்பில் முதல் ஆண்டில் சேர பிளஸ்-2 மாணவர்களும், தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக்கில் அழகு சாதனம்-அலங்காரம் (காஸ்மெட்டாலஜி) டிப்ளமோ படிப்பில் முதல் ஆண்டு சேர மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். 
மேற்கண்ட தகவலை அரசு தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment