அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்கள் மூலம், 3,000 எம்.பி.பி.எஸ்., மற்றும், 250 பி.டி. எஸ்., இடங்கள், இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரம்புகிறது. நாடு முழுவதும், 50 நகரங்களில், 929 மையங்களில், 5.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த, 35 தேர்வு மையங்களில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
சென்னையில், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment