Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday, 12 May 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்


மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 'எளிதாக வினாக்கள் அமைந்த இயற்பியல் பாடத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,' என்ற ஆதங்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பயாலஜி பாடங்களை கொண்ட அறிவியல் குரூப்பில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 21 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், எளிதாக வினாக்கள் அமைந்த இயற்பியல் பாடத்தில், 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 78 பேர் 'சென்டம்' பெற்றனர். கணிதம் பாடத்தில், 142 பேர் 'சென்டம்' பெற்றாலும், 96 சதவீதமே தேர்ச்சி உள்ளது.குறிப்பாக, "இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களில் 'சென்டம்' அதிகரித்தாலும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை," என மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதனால், பொறியியல் படிப்புக்கான 'கட்ஆப்' குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், மறுமதிப்பீட்டிலாவது ஒன்று, இரண்டு மதிப்பெண் அதிகரித்தால், 'கட்ஆப்' அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் தான் இந்தாண்டு விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக, இயற்பியல் பாட விடைத்தாள் நகல் தான் அதிகம் கேட்கின்றனர் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இயற்பியல் விடைத்தாள் நகல்கள் கேட்டு தான் மாணவர்கள் அதிகம் விண்ணப்பிக்கின்றனர். மே 14 கடைசி நாள் என்பதால் அன்றுதான் எத்தனை பேர் விண்ணப்பித்தனர் என்ற விவரம் தெரியவரும்.பிளஸ்2 முடிவு மே 9ல் வெளியானாலும், அன்றே விடைத்தாள் நகல் பெற விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய தாமதம் ஏற்பட்டது. நேற்று விடுமுறை என்பதால், மே 10ல் பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. எனவே, விடைத்தாள் நகல் பெற்று, குறுகியகாலத்திற்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர், என்றார்.

No comments:

Post a Comment