Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 9 May 2014

டி.என்.பி.எஸ்.சி. மற்றும் யு.ஜி.சி. தேர்வு ஒரே நாளில் 2 தேர்வு நடப்பதால் விண்ணப்பதாரர்கள் குழப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு துறையில் நேர்முக எழுத்தர், உதவியாளர்கள் ஆகிய துறைகளில் காலியாக உள்ள 2,269 பணியிடங்களை நிரப்புவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்.2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் கணக்குத்துறையில் 577 பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 2 ஆயிரத்து 846 காலி பணியிடங்களுக்கும் வருகிற ஜூன் 29ம் தேதி தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது.இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழு என அழைக்கப்படும் யுஜிசி நடத்தும் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வும், உதவித் தொகையுடன் ஆராய்ச்சி படிப்பிற்கான தகுதித் தேர்வும் ஜூன் 29ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிந்தது. நெட்‘ தகுதித் தேர்வுக்கு கல்வித் தகுதி முதுநிலை பட்டமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும்.
எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் ‘2 ஏ‘ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள முதுநிலை பட்டதாரிகள் பலர் ‘நெட்‘ தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.இரண்டு தேர்வுகளும் ஜூன் 29ம் தேதி ஒரே நாளில் நடப்பதால் எந்தத் தேர்வை எழுதுவது என முதுநிலை பட்டதாரிகள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. ‘நெட்‘ தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் தான் ‘நெட்‘ தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ‘நெட்‘ தகுதித் தேர்வை வேறு தேதிக்கு மாற்றுவது இயலாத காரியம். எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் ‘2 ஏ‘ தேர்வை மற்றொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என முதுநிலை பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment