Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 20 May 2014

சிறுபானமையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கான தேதி மே 31வரை நீட்டிப்பு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கைக்கான தேதி வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளின்படி, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கை செய்யப்பட உள்ள மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தேதி மே 18 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களின் நலன் கருதி வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த தகவல்கள் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment