நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது' என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான, மத்திய அரசின், தேசிய தகுதித்தேர்வு ('நெட்'-நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) ஜூலை 29ல் நடக்கிறது. அன்று, தமிழக அரசின் 'குரூப் 2' தேர்வும் நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும், தமிழகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேனியை சேர்ந்த அசோகன் கூறுகையில், ''நாங்கள் 50 பட்டதாரிகள் இணைந்து, தேனி ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து, போட்டி தேர்வுக்கு படித்து வருகிறோம். இரண்டு தேர்விலும் பங்கேற்க வேண்டும், என்பது எங்கள் விருப்பம். ஆனால், மத்திய அரசின் தேர்வு நாடு முழுவதும் நடப்பதால், தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை. 'குரூப் 2' தேர்வு தேதியை, தமிழக அரசு மாற்றி அமைத்தால், பட்டதாரிகள் பயனடைவர்,'' என்றார்.
No comments:
Post a Comment