Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 1 May 2014

புகையிலை நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை -தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு


புகையிலை நிறுவனங்கள் நடத்தும் எந்த போட்டியிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போக் குவரத்து விதிகள், எய்ட்ஸ் நோய் தடுப்பு உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டி களும் நடத்தப்படுவதும் வழக்கம்.
விழிப்புணர்வு தொடர்பான பேரணிகள் மற்றும் ஊர்வலங்களில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொள்வார்கள். அதேபோல், இதுகுறித்த போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுவோருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள், பாராட்டுச் சான்றி தழ்கள் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தடை இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச் சிகளுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஸ்பான்சர் செய் வது வழக்கம். விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்படும் போட்டி களுக்கு பரிசுகளையும் அந்த நிறுவனங்கள் வழங்கிவிடும். இந்த நிலையில், புகை யிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை (பீடி, சிகரெட், பான்பராக், குட்கா, கான்ஸ், மாவா) தயாரிக்கும் நிறுவனங் களால் வழங்கப்படும் பரிசுப் பொருட்களை வாங்கவும், அந்த நிறுவனங்கள் நடத்தும் எந்த விதமான போட்டியிலும் பங்கேற் கவும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. கல்வி அதிகாரிக ளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:- இந்திய புகையிலை நிறுவனம் (ஐடிசி) நிறுவனத்தால் பள்ளிகளில் போட்டிகளில் நடத்துவதையும், அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு பொருட்களையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாவட்ட அளவிலோ அல்லது ஒன்றிய அளவிலோ புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட் கள் பயன்படுத்தும் நிறுவனங்கள் நடத்தும் எந்தவிதமான போட்டி களிலும் மாணவர்களை பங்குபெற அனுமதி அளிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இதுதொடர்பான அரசு வெளி யிட்ட வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றுமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment