ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகள் குறித்த விவரங்களை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலர் ஜஸ்பால் சிங் சாந்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகளைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை உயர் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துவதற்காக மத்திய உயர் கல்வித் துறையும் எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
எனவே, எய்ட்ஸ் அல்லது ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ள மாணவர்களை ஒதுக்கி வைத்தல் அல்லது பிற மாணவர்கள் கிண்டல் செய்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்க உயர் கல்வி நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஹெச்.ஐ.வி., எஸ்ட்ஸ் பாதிப்புகள் குறித்த விவரங்களை தொழில் படிப்பு பாடத் திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை இணைப்புக் கல்லூரிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment