Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 15 May 2014

பீகார் மாநில குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்க முடிவு


திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த, பீகார் மாநில குழந்தைகள், கல்வி கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் எடுத்துள்ளனர். ஏப்ரல் மாதம், அனைத்து மாவட்டங்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 முதல், 14 வயதிற்குட்பட்ட, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இதில், குடிமங்கலம் மற்றும் விருகல்பட்டி புதூரில், பீகார் மாநிலத்திலிருந்து, தினக்கூலி வேலைக்காக வந்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த, 16 குழந்தைகள், பள்ளி செல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் ராபின் கூறியதாவது:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, 16 குழந்தைகளும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும்போது, பிற குழந்தைகளோடு, பள்ளிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி தெரியாததால், இந்த குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். மற்ற மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும், இந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இந்தி மற்றும் தமிழ் மொழியில் வகுப்புகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment