மழை வருது...வருதுன்னு சொன்னாரு ரமணன், ஆனா கொளுத்துதே, பாவம் அவரு தான் என்ன பண்ணுவாரு, சொன்னபடி செய்யாமல் இயற்கையே இப்படி செய்யுதே... என்று தனக்கே உரித்த பாணியில் புலம்பிக்கொண்டே வந்தாள் சுசீலா மாமி. சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்த பீட்டர் மாமா, முதல்ல சாப்பாட்டை முடி, ஆபிசுக்கு போகாம டிமிக்கி கொடுக்க முடியாது... என்று சொன்ன பீட்டர், டிமிக்கின்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது...என்று இன்று ஒரு தகவல் போல ஆரம்பித்தார். ஆரம்பிச்சிட்டீங்களா, யார் டிமிக்கி தந்தாங்க சொல்லுங்க... மக்களவை தேர்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. அதன் பின் அவர்கள் வாக்குப்பதிவுக்கு செல்ல வேண்டிய பணியிடங்களும் அவர்களிடம் சொல்லப்பட்டது.
ஆனால், சில ஆசிரியர்கள் இதற்கு டிமிக்கி கொடுத்துட்டாங்க. லோக்கல்ல வேலை பார்க்கலாம்ன்னா ரொம்ப தூரத்துல போடறாங்களே...ன்னு நினைச்சு, பயிற்சிக்கும் போகலே, பூத் பணிக்கும் போகாம இருந்துட்டாங்க...இப்ப அவங்க பத்தின லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க அதிகாரிங்க. தேர்தல் பணிக்கு வராம லீவு போட்டுட்ட ஆசிரியருங்க மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம்... இந்த பயத்துலதான் சில ஆசிரியருங்க இருக்காங்களாம்...
No comments:
Post a Comment