Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 28 June 2014

பிளஸ் 2 தேர்வு: ஒரு மதிப்பெண்ணிற்கு போராட்டம்: ஐகோர்ட் உத்தரவு


பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில், ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்திருந்தும், 3 க்கு 2 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், தேர்வுத்துறை மறுமதிப்பீடு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. டி.கல்லுப்பட்டி பாண்டியன் தாக்கல் செய்த மனு: என் மகள் பவித்ரா. பிளஸ் 2 தேர்வு தாவரவியல் பாடத்தில் 15 வது கேள்விக்கு சரியான விடையளித்திருந்தார். இதற்கு முழு மதிப்பெண் 3 க்கு பதில், 2 மதிப்பெண் வழங்கியுள்ளனர். முழு மதிப்பெண் வழங்கி, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பவித்ராவை அனுமதிக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆர்.ஆர்.கண்ணன் ஆஜரானார்.
நீதிபதி: விடைத்தாள் மறு மதிப்பீடு, மறு கூட்டல் பிரச்னை இருந்தால், அரசு தேர்வுத்துறைக்குத் தான் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக ஐகோர்ட்டை நாடக்கூடாது. மனுதாரர் மகள், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர், தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறுகிய காலத்தில், மறுமதிப்பீடு செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment