Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 26 June 2014

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்


தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், 2004 முதல் 2006 ம் ஆண்டு வரை கள்ளர் சீரமைப்புத் துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 150 பட்டதாரி மற்றும் 50 முதுகலை ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) பணி நியமிக்கப்பட்டனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக, 2.3.2011ல், இப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, 104 பட்டதாரி மற்றும் 35 முதுகலை ஆசிரியர்கள், பள்ளிக் கல்விக்கு மாறும் வாய்ப்பு கிடைத்து, 3 ஆண்டுகளாகியும் அந்த உத்தரவை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. இதில், சிலர் கோர்ட்டை நாடி சிறப்பு மாறுதல் பெற்றுள்ளனர். மீதமுள்ள 139 ஆசிரியர்கள் தொடர்ந்து போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கவலையில் உள்ளனர்.

முதுகலை பட்டதாரி கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஆசிரியர்களுக்காக நடத்தப்படுகிறது. ஆனால், 2004 முதல் பணி நியமனம் பெற்ற இப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை துறைமாறுதல் 'கவுன்சிலிங்' நடக்கவில்லை. பல ஆண்டுகளாக குடும்பம் ஓரிடம், பணி வேறிடம் என்ற நிலையில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து போராடி 2011 அரசு உத்தரவை பெற்ற பிறகும், பல வகையிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளன. தற்போது, நடக்கும் பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' உடன், 139 பேருக்கும் சிறப்பு துறை மாறுதல் 'கவுன்சிலிங்' கையும் கல்வி துறை அறிவித்து, மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டால், ஜூலை 2 வது வாரத்தில், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment