பள்ளிகளில் ஆங்கில வழியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம், இந்தியா கல்வியை அடிப்படை உரிமையாக நடைமுறைப்படுத்தி வரும் உலகின் 135 நாடுகளின் பட்டியிலில் இணைந்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசுதீவிரமாக நடைமுறைப்படுத்த, கடந்த 2009ல் மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, அரசு பள்ளி என அனைத்திற்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. எனினும், பெற்றோர் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்க வைக்கவே, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை, எளிய மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் விரும்பும் தமிழ், ஆங்கில வழிகளில் கல்வியை இலவசமாக கற்க கடந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழியை அறிமுகப்படுத்தியது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கந்தாண்டு ஆங்கில வழி சேர்க்கை நடந்தது. இதில், சொற்ப அளவிலான மாணவர்களே சேர்ந்தனர். தொடர்ந்து, நடப்பாண்டு பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ளஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கில வழியில் பாடங்களை சரியாக நடத்த மாட்டார்கள் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் வேரூன்றி உள்ளது. எனவே, மாணவர்களை அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர்க்கவும், போதிய பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்களுக்கு போதிய ஆங்கிலப் பயிற்சியை வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment